
மீண்டும் திரையில் சில்க்

இப்பொழுது தமிழ் இயக்குனர் பா.ரஞ்சித் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி ஒரு வெப் சீரிஸை இயக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் சில்க் ஸ்மிதாவின் குழந்தை பருவம் தொடங்கி இறக்கும் காலம் வரை உண்மைக்கு மிக அருகில் இருக்கும் என்றும் இதுவரை வெளிவராத பல உண்மைகளும் சில்க் ஸ்மிதா பற்றிய பல சுவையான தகவல்களும் சம்பவங்களும் இந்த வெப் சீரிஸில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே பாலிவுட்டில் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படத்தை எடுக்கிறேன் என்று தப்பு தப்பாக தகவல்களை வைத்து டர்ட்டி பிக்ச்சர் என்ற படத்தை வித்யா பாலனை வைத்து எடுத்து அந்த படம் ஹிட்டாகி வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.