நயன்தாராவின் அடுத்ததும் ரெடி!

frame நயன்தாராவின் அடுத்ததும் ரெடி!

SIBY HERALD
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சென்ற வாரம் வெளியான படம் கோலமாவு கோகிலா என்ற கோகோ. அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் யோகிபாபு மற்றும் பலர் நடித்த கோலமாவு கோகிலா படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் என பலரின் பாராட்டுகளையும் பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாராவின் அடுத்த படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டது.



மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி ஹிட்டடித்த ஹாரர் படமான டிமாண்டி காலனி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவின் அடுத்த படமான இமைக்கா நொடிகள் தான் அந்த படம். இந்த படத்தில் நயன்தாரா அஞ்சலி விக்ரமாதியன் என்ற சி.பி.ஐ அதிஆரியாகவும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ருத்ரா என்ற சைக்கோ கொலைகாரனாகவும் நடித்துள்ளனர்.



மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நயந்தாராவின் ஜோடியாகவும் அதர்வ நயனின் தம்பியாகவும் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்டு முப்பதாம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்கள் ஓட கூடிய இந்த படம் நயனின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. 


Find Out More:

Related Articles: