
கிரிக்கெட் வீராங்கனையாக மாறிய ஐஸ்வர்யா

இந்நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு வேறு மாதிரியான வாய்ப்புகளும் வேடங்களும் கவுதம் மேனனின் துருவ நட்சத்திரம், தனுஷின் வட சென்னை ஆகிய படங்களில் அமைந்துள்ளன. இவரது அடுத்த படமான கனா படத்தில் கிராமத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகும் ஒரு இளம் பெண்ணாக ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது. டீசரை கண்டா அனைவருமே ஐஸ்வர்யா நிஜ கிரிக்கெட் வீராங்கனையை போலவே பவுலிங் மற்றும் பேட்டிங் செய்து அசத்துவதை கண்டு ஆச்சர்யப்பட்டு போயிருக்கிறார்கள். கனா படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க சிவ கார்த்திகேயன் தயாரித்துள்ளார்.