
சமந்தாவுடன் மோதும் நாக சைதன்யா

த்ரில்லர் படமான இதில் சமந்தாவின் முதல் படமான மாசுகோவின் காவிரி படத்தின் ஹீரோ ராகுல் ரவீந்திரன் அவருக்கு ஜோடியாக நடிக்க, ஈரம் புகழ் ஆதி பினிசெட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்க, பூமிகா பேயாக நடித்துள்ளாராம். சூப்பர்நேச்சுரல் படமான யூ டர்ன் செப்டம்பர் பதிமூன்றாம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது.

இதில் ஹைலைட் என்ன என்றால் அதே நாளில் தான் வெளியாக உள்ளது சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவின் அடுத்த படமான சைலஜா ரெட்டி அல்லுடு. மாருதி இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் அணு இம்மானுவேல் நடித்துள்ள இந்த படம் இந்த மாதமே வெளியாவதாக இருந்தும் கூட கேரளா மழையால் செப்டம்பர் பதிமூன்றாம் தேதிக்கு தள்ளி போயுள்ளது. பார்க்கலாம் கணவன் மனைவி பாக்ஸ் ஆபிஸ் யுத்தத்தில் ஜெயிக்க போவது சமந்தாவா சைதன்யாவா என்று.