கோடிகளின் நாயகி நயன்தாரா

frame கோடிகளின் நாயகி நயன்தாரா

SIBY HERALD
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் கோலமாவு கோகிலா என்ற கோகோ படத்தில் நடித்தார். கோகிலா என்ற மிடில் க்ளாஸ் பெண்ணாக தன் தாயின் உடல்நலத்தை பாதுகாக்க போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் துணிச்சலான பெண்ணாக நயன் இந்த படத்தில் நடித்திருந்தார்.

Image result for nayantara imaikaa nodigal


யோகி பாபுவின் காமெடி அனிருத்தின் துள்ளல் இசை நயனின் அழகு என கோலமாவு கோகிலா வெளியாகி இரண்டே வாரங்களில் கிட்டத்தட்ட இருபத்தி ஏழு கோடிகள் வசூல் செய்து இன்னும் குடும்பங்களின் ஆதரவுடன் ஓடி வருகிறது. இந்நிலையில் தான் அடுத்ததாக வெளியானது நயனின் இமைக்கா நொடிகள் படம். டிமான்டி காலனி புகழ் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த படத்தில் நயன் அஞ்சலி விக்ரமாதித்யன் என்ற சிபிஐ அதிகாரியாக ருத்ரா என்ற சைக்கோவாக நடித்த அனுராக் காஷ்யப்பை வேட்டையாடும் பெண்ணாக நடித்திருந்தார்.

Image result for nayantara imaikaa nodigal


இந்த படம் ரிலீஸ் தேதி அன்று பிரச்சனைகளை சந்தித்தாலும் கூட நான்கே நாட்களில் பதினான்கு கோடிகளை வசூல் செய்து ஹிட் ஆகியுள்ளது. இதன் மூலமாக ஒரே நேரத்தில் இரண்டு வெற்றி படங்களை கொடுத்து தான் லேடி சூப்பர்ஸ்டார் தான் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் நயன்தாரா. 


Find Out More:

Related Articles: