
வெற்றியை கொண்டாட வந்த சிம்பு!

ப்ரகாஷிராஜின் கேங்ஸ்ட்டர் குடும்பத்தின் கடைக்குட்டியாக சிம்புவின் நடிப்பும் அதிலும் குறிப்பாக அதிதி ராவுடன் வரும் காட்சியும் க்ளைமாக்ஸ் காட்சியில் சிம்புவின் நடிப்பும் ரசிகர்களை செமையாக திருப்தி படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று சிம்பு தனது அடுத்த படமான சுந்தர்.சியின் படத்தின் முதல் ஷெட்யூலை ஜார்ஜியாவில் முடித்து விட்டு சென்னை திரும்பினார்.

இவரை சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள சிம்பு தனது ரசிகர்கள் அனைவருக்கும் செக்க சிவந்த வானம் வெற்றிக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமின்றி தன்னை நம்பி இந்த எத்திராஜ் வேடத்தை கொடுத்து தனக்கு ஒரு காம்பேக் கொடுத்த இயக்குனர் மணிரத்னத்துக்கு சிம்பு தனது நன்றியை கூறினார்.