கவர்ச்சி போலீசாக நிவேதா!

frame கவர்ச்சி போலீசாக நிவேதா!

SIBY HERALD
ஒரு நாள் கூத்து புகழ் அடியே அழகே நாயகி நிவேதா பெத்துராஜ் படங்களே இல்லாமல் இருப்பது போலவே இருந்தாலும் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் முதலாவதாக வர இருப்பது திமிரு புடிச்சவன்.



இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வர உள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்தை வைத்து நம்பியார் என்ற படத்தை இயக்கிய கணேஷா இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனியும் நிவேதா பெத்துராஜும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர்.



நிவேதா பெத்துராஜ் மடோனா என்ற காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படம் முழுவதும் காக்கி உடையில் புல்லட் ஓட்டியபடி நடித்துள்ள நிவேதா பாடல் காட்சிகளில் படு செக்சியாக தோன்றி உள்ளாராம். இந்த படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் ஆறாம் தேதி திரைக்கு வர உள்ளது. 


Find Out More:

Related Articles: