மீண்டும் கும்கி மேனன்
சுசீந்திரன் இயக்கத்தில் பாண்டிய நாடு, தல அஜித் தங்கையாக வேதாளம் என வெற்றி படங்களாக நடித்து தள்ளினார். ஆனாலும் கூட இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெரிதாக படங்கள் எதுவும் அமையவில்லை. கடைசியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெயம் ரவி ஜோடியாக மிருதன் படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக ரெக்கை படத்திலும் நடித்தார்.
பிரபு தேவா ஜோடியாக நடித்த சுங் மாங் படமும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவருக்கு பெரிய பரிசாக அடுத்ததாக இவர் தனுஷ் ஜோடியாக முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ராட்சசன் படத்தை அடுத்து வர உள்ள இந்த படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் ஆகும்.