லிங்குசாமி எடுக்கும் பயோபிக்!

frame லிங்குசாமி எடுக்கும் பயோபிக்!

SIBY HERALD
இயக்குனர் லிங்குசாமி ஆனந்தம் ரன் சண்டக்கோழி பையா வேட்டை என மாறுபட்ட ஆக்ஷன் கலந்த மசாலா குடும்ப படங்கள் எடுப்பதில் எக்ஸ்பர்ட். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக படங்கள் எதுவும் எடுக்கவில்லை. அத்தனைக்கும் ஒரே காரணம் அவர் எடுத்த ஒரே ஒரு படம் அஞ்சான். சூர்யா நடித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான அஞ்சான் படம் படு தோல்வி அடைந்ததோடு மட்டுமல்லாமல் மீம் க்ரியேட்டர்களின் செல்லப்பிள்ளையாகவும் லிங்குசாமியை ஆக்கியது.

Image result for keerthy suresh apherald


அவர்கள் கற்றுக்கொண்ட மொத்த விதையையும் அவர் மீது இறக்கவே மனம் நொந்த லிங்குசாமி படங்கள் எடுக்காமலே இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியுள்ளார் தனது ஹிட்டான சண்டைக்கோழியின் சீக்வலான சண்டக்கோழி டூ மூலமாக.

Image result for keerthy suresh apherald


விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் சுமாராக ஓடி வரும் நிலையில் அடுத்ததாக அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க போகிறார் என திவாகரன் அறிவித்துள்ளார். இந்த படத்தில் சசிகலா மற்றும் நடராஜனின் கதாபாத்திரங்கள் பற்றி தெளிவாக காட்டப்படும் என்றும் கூறியுள்ளார். 


Find Out More:

Related Articles: