
ஹீரோக்களை சாடிய ஷ்ரத்தா!

மேலும் இவன் தந்திரன் மற்றும் ரிஷி ஆகிய படங்களிலும் ஷ்ரத்தா நடித்தார். இப்பொழுது தெலுங்கில் நேச்சுரல் ஸ்டார் நாணி ஜோடியாக ஜெர்சி என்ற கிரிக்கெட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது தோழியான நடிகை சுருதி ஹரிஹரன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து ட்விட்டரில் ஸ்ருதிக்கு ஆதரவு தெரிவித்த ஷ்ரத்தா எப்பொழுதும் திரையில் அரை டஜன் வில்லன்களை ஆகாயத்தில் பறக்க விட்டுக்கொண்டு லாரிகளை பறக்க விட்டு கொண்டு அநீதிக்கு எதிராக எப்பொழுதும் போராடும் நம் ஹீரோக்கள் எல்லாம் இந்நேரத்தில் எங்கு போனார்கள்?

அவர்களின் குறளுக்காக காத்து கொண்டிருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலமாக ஷ்ரத்தா மீ டூ இயக்கத்திற்காக குரல் எதுவும் எழுப்பாமல் அமைதி காக்கும் சினிமா ஹீரோக்களை கலாய்த்துள்ளார்.