மீண்டும் வெற்றி கூட்டணி!

SIBY HERALD
தல அஜித் சென்ற ஆண்டு சிவாவின் இயக்கத்தில் நடித்த விவேகம் படத்தை தொடர்ந்து தனது ஐம்பத்தி எட்டாவது படமாக மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இனைந்து விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தல ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.



பொங்கலுளுக்கு வெளியாகும் விஸ்வாசம் ஷூட்டிங் முடியும் முன்னரே தலையின் அடுத்த படம் பற்றிய செய்திகள் கசிய ஆரம்பித்து விட்டன. தலையின் அடுத்த படத்தை இயக்க உள்ளது சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத்.



இவரது இந்த படத்தை மறைந்த கனவுக்கன்னி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இந்த படம் பாலிவுட் படமான பிங்கின் ரெமேக்காகும். இதற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம். ஏற்கனவே ரஹ்மானும் அஜித்தும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பவித்ரா மற்றும் வரலாறு படங்களில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: