
மீண்டும் தெலுங்கில் நிவேதா!

விவேக் ஆத்ரேயா என்ற புதுமுக இயக்குனர் இயக்கிய மெண்டல் மதிலோ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். சிவேசா என்ற வேடத்தில் நிவேதா தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தாலும் படம் என்னவோ பிளாப் தான். இதனை தொடர்ந்து இப்பொழுது தான் சமீபத்தில் தனது கேரியரில் முதல் ஹிட்டை தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக் மூலமாக கொடுத்தார்.

ஹிட் அடித்த உடனே அவருக்கு மீண்டும் ஒரு தெலுங்கு வாய்ப்பு அமைந்துள்ளது. சாய் தரம் தேஜ் நடிக்க உள்ள சித்ரா லஹரி படத்தில் நிவேதா நாயகியாக நடிக்க உள்ளார். கிஷோர் திருமலா இயக்க உள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷனும் நடிக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.