நித்யாவின் புது முயற்சி!

SIBY HERALD
நடிகை நித்யா மேனன் கடைசியாக தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் ஒரு கவுரவ வேடத்தில் நடித்தார். வெறும் இரண்டு மூன்று காட்சிகளிலேயே நடிக்கும் அளவுக்கு ஒரு காலத்தில் முன்னணி நாயகியாக இருந்த நித்யஞ் மேனன் தள்ள பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியே. இந்நிலையில் இதற்கு எல்லாமே காரணம் நித்யா மேனனின் அதிகரித்து வரும் எடையால் தான் என்று கூறப்படுகிறது.



ஆனால் இப்பொழுது வரிசையாக நித்யா சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒரு படத்தை இயக்குனர் ஷாஹித் காதற் இயக்க உள்ளார்.



இந்த படத்தில் நித்யா மேனன் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து தேசிய அளவில் தடகள வீராங்கனையாக நடிக்க உள்ளாராம். தடகள வீராங்கனையாக நடிப்பதற்காக நித்யா மேனன் எடை குறைப்பில் ஈடுபட்டு இரண்டே மாதத்தில் புது தோற்றத்தில் வருவதாக சபதம் எடுத்துள்ளாராம். 


Find Out More:

Related Articles: