சிவா- காரணம் என்ன?

frame சிவா- காரணம் என்ன?

SIBY HERALD
நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக தனது வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஹிட் டைரக்டரான  பொன்ராமுடன் இனைந்து சீமராஜா படத்தில் நடித்தார். சமந்தா ஜோடியாகவும், சூரி நண்பனாகவும் வழக்கம் போல நடிக்க, சிம்ரன் வில்லியாக தோன்றிய சீமராஜா படம் ஓப்பனிங் வசூலை குவித்தாலும் இறுதி ரிசல்ட் என்னவோ ஆவரேஜ் தான்.



இதனை தொடர்ந்து சிவா தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள படம் தான் கனா. இந்த படத்தில் கிராமத்தில் இருந்து வந்து தேசிய கிரிக்கட் அணியில் இடம்பெறும் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, அவரது தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார்.



மேலும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நெல்சன் திலீப்குமார் என்ற கிரிக்கட் கோச்சாக நடித்துள்ளார். அது என்ன நெல்சன் திலீப்குமார்? இவர் விஜய் டிவியில் சிவா இருந்த காலத்திலிருந்தே அவரது நண்பர் ஆவார். சமீபத்தில் கோலமாவு கோகிலா படத்தை நயன்தாராவை வைத்து இயக்கிய இவர் தான் சிவாவின் அடுத்த படத்தை இயக்குவார் என்று கிசுகிசு பரவி வருகிறது. கனா படம் வரும் வெள்ளி அன்று திரைக்கு வருகிறது. 


Find Out More:

Related Articles: