இசையமைப்பாளர் ஆகும் விஜய் சேதுபதி!

SIBY HERALD
நடிகர் விஜய் சேதுபதி மிகவும் வெற்றிகரமான முன்னணி நடிகர் ஆகிவிட்டார். அடுத்ததாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.



அறிமுக இயக்குனர் வேங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்க உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு பியானோ இசையமைப்பாளர் ஆக நடிக்கவுள்ளார். கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் சமயத்தில் நடக்கும் இப்படத்தில் ஒரு முக்கியமான உலக பிரச்னையை பற்றி பேசவுள்ளார்களாம்.



சேதுபதி மற்றும் தெகிடி படங்களுக்கு இசையமைத்துள்ள நிவாஸ் பிரசன்ன இசையமைக்க உள்ளார். மார்ச் மாதம் ஷூட்டிங் தொடங்கவுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்துக்காக ஒரு பிரம்மாண்ட சர்ச் செட் போடப்பட்டுள்ளது. மூணார் மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles: