மீண்டும் இணையும் தனி ஒருவன் கூட்டணி!

SIBY HERALD
நடிகர் ஜெயம் ரவி கடைசியாக அடங்கமறு படத்தில் ராஷி கண்ணா ஜோடியாக நடித்திருந்தார். பலத்த போட்டியை தாண்டி இந்த படம் ஆறு படங்களோடு மோதி ஹிட் ஆனது. இதனை அடுத்ததாக இரண்டு தோற்றங்களில் கோமாளி என்ற புதிய படத்தில் இவர் நடித்து வருகிறார்.



இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். இதில் காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.



இவர் ஏற்கனவே ஜெயம் ரவியின் கேரியரிலேயே மிகப்பெரிய பிளாக்பஸ்டரான தனி ஒருவன் படத்திற்கு இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Find Out More:

Related Articles: