திருமணத்துக்கு பின்னரும் சாயிஷா நடிப்பார்!

SIBY HERALD
நடிகை சாயிஷா தெலுங்கில் அகில்  படம் மூலம் அறிமுகமானார், பின்னர் ஹிந்தியில் ஷிவாய் படத்தில் நடித்தார், தமிழில் ஜெயம் ரவியுடன் வனமகன் படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்த மூன்றுமே பிளாப் ஆகின. ஆனால் மீண்டும் இவருக்கு லக் இருக்கவே விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, ஆர்யாவுடன் கஜினிகாந்த், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் என்று நடித்து தள்ளினார்.


இதில் கடைக்குட்டி சிங்கம் மட்டுமே பிளாக்பஸ்டர் படமாக வெற்றி பெற்றது. ஆனால் தோல்வி அடைந்த கஜினிகாந்த்தின் போது ஆர்யாவும் சாயிஷாவும் காதலிக்க தொடங்க, இப்பொழுது பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் மார்ச் மாதத்தில் ஹைதராபாதில் நடக்க உள்ளது.


திருமணத்துக்கு பின்னரும் சாயிஷா தொடர்ந்து நடிப்பாராம். மேலும் தற்பொழுது ஆர்யாவும் சாயிஷாவும் சூர்யாவின் காப்பான் படத்தில் சேர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


Find Out More:

Related Articles: