நடித்து முடித்த லால்!

frame நடித்து முடித்த லால்!

SIBY HERALD
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் கடைசியாக அங்கே ஓடியன் என்ற படத்தில் நடித்தார். முதல் மலையாள சூப்பர்ஹீரோ என்று விளம்பரம் செய்யப்பட்ட அந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்து படு தோல்வி அடைந்தது. அதனை அடுத்ததாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்மம் படத்தில் நடித்து வருகிறார்.

Image result for kaappaan


மேலும் தமிழில் சூர்யா ஹீரோவாக நடித்து வரும் அதிரடி ஆக்ஷன் படமான காப்பான் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் லால்.

Image result for kaappaan


இந்த படத்தில் சூர்யா கமேண்டோவாக நடிக்க மோகன்லால் இந்திய பிரதமராக சந்திரகாந்த் வர்மா என்ற வேடத்தில் நடித்துள்ளார். நேற்றோடு தனது பகுதியை நடித்து முடித்து கொடுத்துவிட்டார் லால். காப்பான் படம் சுதந்திர தினத்தன்று திரைக்கு வரும் என்று பேசப்படுகிறது. 


Find Out More:

Related Articles: