மீண்டும் ரஜினியுடன் அனிருத்!

SIBY HERALD
இசையமைப்பாளர் அனிருத் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹிட்டடித்த பேட்ட படத்துக்கு இசையமைத்தார். இது சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் அவரது முதல் படமாகும், தற்பொழுது உலக நாயகனை வைத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் எடுத்து வரும் இந்தியன் 2 படத்துக்கும் அனிருத் தான் இசையமைப்பாளர்.



இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அடுத்த பெரிய செய்தி ஒன்றை போட்டு உடைத்துள்ளார்  அனிருத். சூப்பர்ஸ்டார்   ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திலும் அனிருத் தான் இசையமைக்க உள்ளதாக அவரே உளறி விட்டார்.



இதனால் சர்ப்ரைஸாக இருக்க வேண்டியது வெளியாகி விட்டது. இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான் சூப்பர்ஸ்டாரின் ஜோடி.


Find Out More:

Related Articles: