போட்டியை தவிர்த்த தேவி!

frame போட்டியை தவிர்த்த தேவி!

SIBY HERALD
நடிகை  தமன்னா மற்றும் பிரபுதேவா நடிப்பில் மூன்று ஆண்டுகள் முன்னர் வெளியான படம் தேவி.ஏ.எல்.விஜய் இயக்கிய இந்த ஹாரர் காமெடி படம் ஓரளவுக்கு வெற்றிகரமாக ஓடியது. இதனை அடுத்ததாக இதே கூட்டணியோடு இதன் இரண்டாம் பாகமாக தேவி 2 படத்தை எடுத்து முடித்தார் விஜய்.

Image result for tamanna devi 2 apherald


அதே போல ஜிவி பிரகாஷை வைத்து வாச்மேன் என்ற படத்தையும் இயக்கி முடித்தார் விஜய். ஆனால் அவரது அதிர்ஷ்டம் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் ஒரே தேதியாக ஏப்ரல் பன்னிரண்டாம் தேதி படங்கள் வெளியாகும் என்றும் அறிவித்தனர். இதனால் விஜய் வெர்சஸ் விஜய் பாக்ஸ் ஆபிசில் என்று  நிலைமை உருவானது. 

Image result for tamanna devi 2 apherald


இதனால் இயக்குனர் விஜய் குழப்பத்தில் இருந்தார். ஆனா இப்பொழுது வாட்ச்மேன் படம் மட்டும் தான் ஏப்ரல் பனிரெண்டாம் தேதி வெளியாகும் என்றும் தேவி 2 வேறு ஒரு நாள் தள்ளி போகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேவி 2  படத்தில் நந்திதா ஸ்வேதா மற்றும் கோவை சரளா ஆகியோரும் நடித்துள்ளனர். 


Find Out More:

Related Articles: