சென்சாரான அருள்நிதி படம்!

SIBY HERALD
இளம் நடிகர் அருள்நிதி கடைசியாக அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கிய த்ரில்லரான இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருந்தார். அதனை அடுத்ததாக அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டனின் இயக்கத்தில் கே 13  என்ற படத்தில் நடித்து வந்தார்.



இந்த படத்தில் தல அஜித்தின் நேர் கொண்ட பார்வை, மற்றும் விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் இவரது ஜோடியாக நடிக்க, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் காயத்ரி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.



மேலும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்த நிலையில் இப்பொழுது படம் சென்சாரால் யூ/ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. 


Find Out More:

Related Articles: