அடல்ட் இயக்குனருடன் அரவிந்த் சாமி!

SIBY HERALD
கவுதம் கார்த்திக் நடிப்பில் ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து  அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார். இவரது தீமைதான் வெல்லும் படம் டிராப் ஆன நிலையில் இவரது   அடுத்த படத்தின் பூஜை  சென்னையில் நடைபெற்றது.



இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி ஹீரோவாக நடிக்கவுள்ளார். நயன்தாரா நடித்த கொலயுதிர்க்காலம் போன்ற படங்களை தயாரித்த நிறுவனமான எட்செட்டரா  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.



டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்க பள்ளு ஒளிப்பதிவு செய்ய பிரசன்ன குமார் படத்தொகுப்பு செய்வார் என்று அறிவிக்க பட்டுள்ளது. இமான் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏற்கனவே சந்தோஷ் ஜெயகுமாரின் முந்தைய படங்களில் பணியாற்றியவர்கள்.


Find Out More:

Related Articles: