ரம்ஜானில் வரும் கொலைகாரன்!

SIBY HERALD
விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடித்த 'கொலைகாரன்' திரைப்பட ரிலீஸ் தேதி  அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் வெளியான அந்த படத்தின் புரமோஷன் வீடியோவில் ரிலீஸ் தேதி அறிவிக்க பட்டுள்ளது. கொலைகாரன்  படம்  ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு  ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இப்பொழுது  படத்தின் புரமோஷன் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.   சஸ்பென்ஸ் திரில்லர் படமான கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனி, ஆக்சன் கிங்  அர்ஜூன், ஆஷிமா, நாசர், சத்யன், குரு சோமசுந்தரம், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார், பிரதீப் தயாரித்துள்ளார்.சைமன் கிங் இசையில்  உருவாகியுள்ள இந்த படம் ஒரு மர்டர் மிஸ்டரி ஆகும்.  


Find Out More:

Related Articles: