
பிரகாஷ்ராஜின் சர்ச்சை கருத்து!

இந்த பேச்சுக்கு தமிழ் மாணவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக டெல்லியில் பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் டெல்லி பல்கலைக்கழகத்தில் டெல்லி மாணவர்களின் வாய்ப்பை தமிழ் மாணவர்கள் பறிப்பது உண்மை என்றும், தான் கன்னடன் என்றும் கூறியுள்ளார்.

இந்த பேச்சு அவரது தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ்ராஜ் கன்னடராக இருக்கலாம், ஆனால் தமிழ்ப்படங்களில் நடித்ததால் அவர் பிரபலமானார். தனது சொந்த படங்களையும் தமிழில்தான் தயாரித்தார், கோடிகோடியாக சம்பாதித்தார், இதை மறந்துவிட்டு அவர் தமிழர்களுக்கு எதிராக பேசியுள்ளது வேதனை என்று மக்கள் கூறியுள்ளனர்.