போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?

frame போலீசாக ஜெயிப்பாரா அதர்வா?

SIBY HERALD
நடிகர் அதர்வா இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டாலும் கூட இதுவரை சோலோ ஹீரோவாக ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. இத்தனைக்கும் அவர் பிரபல இயக்குனர் பாலாவின் பரதேசி படத்தில் கூட சிறப்பாக நடித்து தனது உடலை வருத்தி கொண்டு புதிய தோற்றத்தில் எல்லாம் நடித்து பார்த்தார்.



ஆனால் எதுவும் விளங்கவில்லை. சொந்தமாக படம் தயாரிக்கிறேன் பேர்வழி என்று தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த பத்ரிக்காக செம போத ஆகாதே  படத்தை தயாரித்து கையை சுட்டு கொண்டது தான் மிச்சம்.

Image result for atharvaa hansika 100

நயன்தாரா புண்ணியத்தில் இமைக்கா நொடிகள் படம் ஹிட்டானது என்றாலும் கூட அதில் பேசப்பட்டது என்னமோ லேடி சூப்பர்ஸ்டார் தான். இந்நிலையில் இந்த வாரம் டார்லிங் மற்றும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு புகழ் சாம் ஆண்டனின் இயக்கத்தில் இவர் போலீசாக நடித்து வரவுள்ள படம் தான் 100  பார்க்கலாம் இந்த படமாவது அதர்வாவுக்கு ஹிட் ஆகுமா என்று.


Find Out More:

Related Articles: