தர்பார் பற்றிய முக்கிய தகவல்!

frame தர்பார் பற்றிய முக்கிய தகவல்!

SIBY HERALD
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் உருவாகி  வருகிறது. பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை மும்பையில் வைத்து இயக்கி வருகிறார், அங்கே தான் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

Image result for darbar leaked


தற்பொழுது அதிகார பூர்வ அறிவிப்பாக தர்பாரில்   முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 29ஆம் தேதி மீண்டும் மும்பையில் தொடங்கும் என்றும் லைகா நிறுவனம் சமூக வலைத்தள அக்கவுண்டில்  பதிவு செய்துள்ளது.

Image result for darbar leaked


மேலும் அடுத்ததாக வரவுள்ள இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பல இதுவரை நடிக்க தொடங்காத புதிய  நட்சத்திரங்கள் நடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.தர்பார் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் போலீசாக நடிக்க, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, என பலரும் அவருடன் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். 


Find Out More:

Related Articles: