ஒரே நாளில் நயன் - தமன்னா படங்கள்!

frame ஒரே நாளில் நயன் - தமன்னா படங்கள்!

SIBY HERALD
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் கொலையுதிர்க்காலம். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன்  பணிகள் முடிந்த நிலையில் சென்சார் வேலையும் முடிந்து படம் சில நாட்களில்  ரிலீசுக்கு தயாராக உள்ளது.இந்த படத்தின் இந்தி ரீமேக் தான் காமோஷி.

Image result for khamoshi tamanna


தேவி பட ஜோடியான நடிகர் பிரபுதேவா மற்றும் இடுப்பழகி தமன்னா நடித்துள்ள இந்த படம் மற்றும் தமிழ் வெர்ஷனான கொலையுதிர்க்காலம் ஆகிய இரண்டையும் பில்லா 2  மற்றும் உன்னை போல் ஒருவன் படங்களை இயக்கிய  சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இப்பொழுது காமோஷி' திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கபட்டுள்ளதால் மே ரிலீஸ் என பல காலமாக சொல்லப்பட்டு வரும் கொலையுதிர்க்காலம் படமும் அதே மே 31ஆம் தேதி ரிலீஸ் ஆகுமோ என்று திரை வட்டத்தில் உள்ளவர்கள் கிசுகிசுத்து வருகின்றனர். 

Image result for khamoshi tamanna


நயன்தாராவும், தமன்னாவும் ஒரே கதையில் காது கேளாத வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ள  கொலையுதிர் காலம் மற்றும் காமோஷி படங்கள்  ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் யார் சிறப்பாக நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Find Out More:

Related Articles: