மீண்டும் படமெடுக்கும் சிம்புதேவன்!

frame மீண்டும் படமெடுக்கும் சிம்புதேவன்!

SIBY HERALD
இயக்குனர் வெங்கட்பிரபு நடத்தி வரும்  பிளாக் டிக்கெட் கம்பெனியின் அடுத்த தயாரிப்பு படத்தை இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பெயர் கசடதபற என அறிவிக்கப்பட்டு இதன் டைட்டில் போஸ்டர்  இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

Image result for kasada thapara movie


இந்த  போஸ்டரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள அக்கவுண்டில் வெளியிட்டார். இந்த படம் ஆறு கதைகளை  கொண்டது அல்ல, ஆனால் ஒரே கதையின் ஆறு பிரிவுகள் என்று கூறப்படுகிறது, மேலும்  ஆறு தனித்தனி நடிகர்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்கள், ஒளிப்பதிவாளர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது,


இவர்களில்  ஆறு எடிட்டர்களின் பெயர்களை எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், சிவா, கலையரசன், வெங்கட்பிரபு ஆகியோர்  நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles:

Unable to Load More