தும்பா ரிலீஸ் அறிவிப்பு!

frame தும்பா ரிலீஸ் அறிவிப்பு!

SIBY HERALD
தமிழ் சினிமாவின் இளம் பிரபலமான  இசையமைப்பாளர்களில் ஒருவரான  அனிருத், வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களான  விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோருடன்  இணைந்து இசையமைத்துள்ள படம் தான் தும்பா. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த  நிலையில் இப்பொழுது  இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for thumbaa movie stills


கோடை விடுமுறையில் தான் முதலில் இந்த  படத்தை ரிலீஸ் செய்ய படகுழுவினர் திட்டமிட்டனர் ஆனால் தள்ளிக்கொண்டே போய் கடைசியாக இப்பொழுது  இந்த படம் ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தின்  ஹீரோவான தர்ஷன் மற்றும் அருண் பாண்டியனின் மகள்  கீர்த்தி பாண்டியன், கலக்க போவது யாரு புகழ் தீனா என  பலரும்  நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர்  ஹரிஷ் ராம் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது, மேலும் இந்த  படத்தில் புலி ஒரு முக்கிய வேடத்தில் வரவுள்ளது. 


Find Out More:

Related Articles:

Unable to Load More