இயக்குனர் வசந்த் இயக்கத்தில் த்ரிஷா

SIBY HERALD
அஜித் நடித்த ஆசை, விஜய்-சூர்யா நடித்த நேருக்கு நேர் உள்பட பல படங்களை இயக்கிய  இயக்குனர் வசந்த்,  கடந்த ஆண்டு சிவரஞ்சனியும் சில பெண்களும்  படத்தை இயக்கியிருந்தார்.



இந்நிலையில்  இயக்குனர் வசந்த் தற்போது விளம்பர படத்தை இயக்கி வருகிறார், இதில் நடிகை த்ரிஷா நடிக்கிறார்.



இந்த விளம்பர பட   படப்பிடிப்பின்போது இருவரும்  எடுத்து கொண்ட ஒரு புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.  த்ரிஷா தற்போது கர்ஜனை, பரமபத விளையாட்டு, ராங்கி  படங்களில் நடித்து வருகிறார்.


Find Out More:

Related Articles: