ராட்சசி - ஒரு பார்வை!
இதுல ராட்சசியா ஜோதிகா மேடமத் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிரமுடியாது, அது படம் பாக்கும் போது உங்களுக்கும் தெரியும். ஒரு கதைய தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க. ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.”
வியாபார நோக்கத்துல கல்விய விக்க ஆரம்பிச்சவங்க, அரசுப் பள்ளிய மக்களோட பொதுப் புத்தியில வேற மாதிரியா உருவாக்கிட்டாங்க. இப்ப தமிழ்நாட்டில இருக்குற பெரிய பெரிய சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்களை உருவாக்குனது அரசுப் பள்ளிதான்னு அழுத்தம் திருத்தமா சொல்லமுடியும். கடந்த பத்து வருடங்கள்ள உருவான அடுத்த தலைமுறை பிரைவேட் ஸ்கூல்ல இருந்து அதிகமா வெளிய வந்தாங்க. தனியார் பள்ளி – அரசுப்பள்ளிங்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவேக் கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்க தான் இந்த "ராட்சசி" கீதா ராணி.
இந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசுப் பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அவங்களுக்கு சல்யூட். இந்தப் படத்தோட ஹீரோ அவங்க தான். அரசுப்பள்ளிகளோட தரம் உயரணுங்கிறது அரசுப்பள்ளியில படிக்கிற பசங்களோட தரம் உயரணுங்கிறதுக்காகத்தான், அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்.