
நேர் கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தல அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி பக்ரித், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விடுமுறைகள் வருவதால் நீண்ட விடுமுறை தினத்தில் அஜித் படம் ரிலீஸ் ஆகிறது.
விஸ்வாசத்திற்கு இணையான ஓப்பனிங் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தரங்,ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ் நடித்துள்ளனர்.