பப்ளி ரகுல்தான் வேண்டும்

frame பப்ளி ரகுல்தான் வேண்டும்

SIBY HERALD
நடிகை ரகுல் ப்ரீத் சிங் பிகினி உடையில் ஸ்பெயின் கடற்கரையில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் ஃபோட்டோக்கள் சமக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது. ஆனால் இந்த போட்டோக்கள் தமிழ்நாட்டு ரசிகர்களை கவரவில்லை. பப்ளியான ரகுல்தான் தேவை என்று கமெண்ட் அடித்து வருகின்றனர். தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங், முதலில் தமிழில் தடையறத் தாக்க படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இதையடுத்து புத்தகம், என்னமோ ஏதோ என இவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியடைந்ததால் ராசியில்லாத நடிகை என்று ஓரம் கட்டப்பட்டார். தமிழ் திரையுலகம் கைகொடுக்காததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.
Image result for rakul preeth at spain in Bikini


தெலுங்கு படவுலகில் கவர்ச்சி காட்டி நடித்ததால் விரைவிலேயே முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார். இருந்தாலும் தமிழிலும் அவ்வப்போது படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். சமீப காலங்களில் தமிழில் இவர் நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் ஸ்பைடர் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. தெலுங்கு, தமிழ் என பல படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் மிக பெரிய வெற்றி இன்னும் கிட்ட வில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு நல்ல கதாபாத்திரங்கள் அமையாததும் ஒரு முக்கியமான காரணம். சமீபத்தில் வந்த மண்மத்துடு 2 படம் ஓரளவு பேசப்பட்டாலும் மாபெரும் வெற்றி என்று சொல்ல முடியவில்லை.



எது எப்படியோ எதை பற்றியும் கவலை படாமல் தன் வேலையில் மும்மரமாக இருக்கிறார் ரகுல். வெற்றி தோல்விகள் ஒரு புறம் இருக்க பிகினி உடையில் வலம் வருவதும், கவர்ச்சி போஸ் கொடுப்பதும் ரகுலின் வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் இவர் ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டின் இபிசா (Ibizz) கடற்கரையில் பிகினி உடையில் உற்சாக துள்ளிக் குதித்து உற்சாகமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தார். இது பற்றி குறிப்பிட்ட ரகுல் ப்ரீத் சிங், மேலே வானம் கீழே மணல் என்னுள் அமைதி, சுற்றிலும் மகிழ்ச்சி (SKY ABOV, SAND BELOW, PEACE WITHIN!! HAPPINESS ALL AROUND) என்று பிகினி உடையில் பதிவிட்டு இளைஞர்களை சூடேற்றி வருகிறார்.


Find Out More:

Related Articles: