என்னை நோக்கி பாயும் தோட்டா செப். 6ல் படம் ரிலீஸ்

frame என்னை நோக்கி பாயும் தோட்டா செப். 6ல் படம் ரிலீஸ்

SIBY HERALD
கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ட்ரெயிலர் வெளியான அரைமணி நேரத்தில் ஹிட் ஆகியுள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா.


இந்த திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுவே நடிகை மேகா ஆகாஷுக்கு முதல் திரைப்படம். தனுஷ் மற்ற படங்களில் நடித்தது போல் இல்லாமல், எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டே வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனாலும் வெளியாகும் தேதி இழுபறியாகவே இருந்து வந்தது.  


இந்நிலையில் இப்போது என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தின் வெளிவரும் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பொது இந்த திரைப்படத்தின் புது ட்ரைலர் கவுதம் மேனனின் ஒன்றாக என்டெர்டெய்ன்மெண்ட் இணையத்தளத்தில் பிரபலமாகி வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இணையதளத்தில் வெளியான அரை மணிநேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.


அதுமட்டுமின்றி, இந்த திரைப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளிவர இருக்கிறது என்று அந்த ட்ரைலரில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். இந்த திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். யக்குனர் கவுதம் மேனன் இயக்கி நடிகர் தனுஷ் நடிக்கும் திரைப்படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுவே நடிகை மேகா ஆகாஷுக்கு முதல் திரைப்படம்.


Find Out More:

Related Articles:

Unable to Load More