சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த அனிரூத் !
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்களின் நீங்க நினைவுகளுடன் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் . பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.
விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.இவர்களுடன் இந்த படத்தில் நாசர் ,சூரி ,ஆசுதோஷ் ராணா , ரவி கிஷன்,மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் , ஸ்ரீ ரஞ்ஜனி, மைம் கோபி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .அதனை தொடர்ந்து சங்கத்தமிழன் படத்தில் விவேக் சிவா மற்றும் சஞ்சனா கல்மஞ்சே ஆகியோர் குரலில் கு .கார்த்திக் வரிகளில் வெளியான "கமலா " எனும் முதல் பாடல் படித்திற்கான எதிர்பார்ப்பை மேலும் தூண்டியது. மேலும் இப்படத்தில் பிரான்சிஸ் எழுதிய " சண்டகாரி நீதான் என் சண்டக்கோழி நீதான் " என்ற பாடலை ராக்ஸ்டார் அனிரூத் பாடியுள்ளார் . இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ளது .