இந்திய சினிமா வரலாற்றில் தனித்துவமான விளம்பர யுக்தியை மேற்கொண்ட ஹவுஸ்ஃபுல்-4 படக்குழு !

SIBY HERALD
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4. ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமான இது ஹவுஸ்ஃபுல் ஃபிரான்சிஸின் நான்காவது பகுதியாகும். அக்‌ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், பூஜா ஹெக்டே மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் .


இந்திய ரயில்வே துறை வருவாய் பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமாக ஒரு ஆக்கபூர்வமான யோசனையை கொண்டு வந்துள்ளனர். அவர்கள் விளையாட்டு முதல் பொழுதுபோக்கு வரை பல்வேறு துறைகளை ஊக்குவிப்பதன் மூலம் ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர் .அவர்கள் சிறப்பு ரயில்கள் தயாரித்து  “Promotion on wheels” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அந்த ரயில்களை பல்வேறு விளம்பர நடவடிக்கைகளுக்காக முன்பதிவு செய்யலாம், இதன் விளைவாக நல்ல விளம்பர யோசனை மட்டுமல்லாமல் இந்திய ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். ஹவுஸ்ஃபுல் 4 “Promotion on wheels”  திட்டத்திற்கு  செல்லும் முதல் படம். மும்பையில் இருந்து  டெல்லிக்கு இந்த சிறப்பு ரயிலின் மூலம் பயணம் செய்து படத்தை விளம்பர படுத்த திரைப்பட குழுவினர்   முன்பதிவு செய்துள்ளனர்.மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும்  சில பத்திரிக்கை நண்பர்களுடன் டெல்லி புறப்பட்டனர் .  பயணத்தின் போது பல்வேறு நிலையங்களில் படத்திற்கான விளம்பரத்தை வெளிப்படுத்த உள்ளனர்.ரயில்வே நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது .மேலும் சமூகவலைத்தளங்களில் #HousefullExpress எனும் ஹேஸ்டேகில் ரசிகர்கள் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பகிர்ந்து வைரலாகினார்கள் .

திரைப்பட தயாரிப்பாளர் சஜித் நதியாட்வாலா கூறுகையில், ”அரசாங்கமும் இந்திய ரயில்வேயின் இந்த புதுமையான நடவடிக்கை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது கலைத்துறை மற்றும் இந்திய ரயில்வேதுறையை  ஒன்றிணைத்ததாகும்  இந்த புதிய புதுமையான அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவினரும் மற்றும் அனைத்து கலைத்துறையினரும் உற்சாகமாக உள்ளனர் ”. இவ்வாறு கூறினார் .

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சிங் கூறியவை " Promotion on wheels” என்ற புதிய திட்டத்தை ஹவுஸ்ஃபுல் 4  திரைப்படம் முதலில் துவங்கி வைத்து தலைநகரான டெல்லிக்கு சென்று விளம்பரப்படுத்துவதில் மகிழ்ச்சியளிக்கிறது . இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 25 இல் வெளியாகிறது .

படத்தின் பாடல்களை சோஹைல் சென், ஃபர்ஹாத் சாம்ஜி, சந்தீப் ஷிரோத்கர் மற்றும் பஞ்சாபி ஹிட் ஸ்குவாட் ஆகியோரும்  பின்னணி இசையை ஜூலியஸ் பாக்கியமும் கையாண்டுள்ளனர். முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டுங்கை சுதீப் சாட்டர்ஜி மற்றும் ராமேஸ்வர் எஸ். பகத் கையாண்டுள்ளனர்.“


Find Out More:

Related Articles: