ஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்!

SIBY HERALD

ஆர்.ஜே.பாலாஜி தன் ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சியில் என்றுமே தவறியதில்லை. அதேபோல் அவர் பேச்சில் எப்போதுமே நகைச்சுவைக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டதில்லை. அவரது பயணமும் இதை நோக்கியதாகவே அமைகிறது. வேடிக்கை மற்றும் கேளிக்கைகளே, அவரது குறி்க்கோளாகவும் நோக்கமாகவும் அமைந்திருக்கிறது.

 

JioSaavn நிறுவனத்தின் 'மைண்ட் வாய்ஸ்" நிகழ்சியில் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் பிரபலமாக இருந்த அரையாண்டு தேர்வு விடுமுறை குறி்த்து ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவை ததும்பும் பேச்சு இடம் பெற்றிருக்கிறது. 'அரப்பரிட்சை லீவு' என்று கிராமப்புற மாணவர்களிடம், அரையாண்டு தேர்வு முடிவுகள் என்று பள்ளி கல்லூரி மாணவர்களிடமும் புகழ் பெற்ற இந்த கொண்டாட்ட மனநிலை ஒரு திருவிழா உணர்வைத் தரும். பலருக்கும் ஏக்கம் மிக்க பழமையான நினைவுகளை இது தருகிறது. இந்த ஆனந்த மன நிலையை அலசுவதுதான் ஆர்.ஜே.பாலாஜியின் மைண்ட் வாய்ஸ் புதிய ஒலி வடிவப் பகுதி. எப்படியிருப்பினும், மாறுபட்ட காலத்திலும் வேறு பட்ட சமூக சூழலிலும் வசிக்கும் இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கல்வி விடுமுறை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த விடுமுறை பெரியதுதான்.

 

 

இந்த பத்து நாள் விடுமுறை, வேடிக்கை விநோதங்கள் நிரம்பியது மட்டுமல்ல... பள்ளிப்பாடங்கள் மற்றும் ரெக்கார்ட் வேலைகளை செய்து தீர வேண்டிய சவால்கள் மிக்கதும்கூட. 90களின் குழந்தைகளுக்கு மிகுந்த நம்பிக்கையளித்த நோட்ஸ் எனப்படும் கைட் லைன் புத்தகங்கள் குறித்தும் இதில் விவரிக்க ஆர்.ஜே.பாலாஜி தவறவில்லை. இந்தப் பகுதியில் மிகவும் நகைச்சுவையாக அமைந்திருப்பது, ரி ஓபனிங் டே எனப்படும் பள்ளி மீண்டும் திறக்கப்படும் நாள். ஏனென்றால் அன்றுதான் திருத்தப்பட்ட நமது விடைத்தாள்கள், மீண்டும் நம்மிடம் திரும்ப வழங்கப்படும். குறிப்பாக பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு பள்ளி இறுதி மாணவர்களுக்கு கண்டிப்பாக இது மிகப் பெரிய மறக்க முடியாத நாளாக இருக்கும்.

 

விளையாட்டுக் கிரிக்கெட்டில் துவங்கி, கோவிலுக்குச் சென்றது வரையிலான மனம் மகிழும் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பாலாஜி, எஸ்.எல்.ஆர்.ரக கேமராக்களை இரவல் வாங்கியதில் ஆரம்பித்து, பள்ளியின் சீருடையான வெள்ளை சட்டையை சலவைக்குப் போட்டு வாங்கித் தயார் நிலையில் வைத்ததுவரை எது ஒன்றையும் தவறவிடவில்லை. ஷீவுக்கு பாலீஷ் போட்டு ரி ஓப்பனிங் டே அன்று பள்ளிக்கு புறப்பட்டது வரையிலான சுவையான நிகழ்வுகளை தனக்கேயுரிய தனி பாணியில் பதிவு செய்யும் பாலாஜியின் இந்த எபிசேட், புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.

 

அது மட்டுமா... 'அலை பாயுதே',  'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களின் பாடல்களை ஒரே கேசட்டில் பார்த்த 90களின் குழந்தைகள், இன்னும் பல மலரும் தருணங்களை இதில் கேட்கலாம்.

Find Out More:

Related Articles: