சாலை பாதுகாப்பை உணர்த்தவரும் " பச்சை விளக்கு"

SIBY HERALD

படம் பற்றி இயக்குனர் டாக்டர் மாறன் கூறும்போது,  “விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும்.  காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் அதில் புதுமையான கதையுடன் இந்தப் படம் இருக்கும். காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை போற்றும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தின் கருத்தை இதுவரை எந்த மொழியிலும் சொல்லவில்லை.

இமான் அண்ணாச்சி தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி நடித்திருக்கிறார். மனோபாலா காமடி வயிறு குலுங்கும்படி சிறப்பாக அமைந்துள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்து இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். இந்தப் படத்தில் என்னுடன் ‘அம்மணி’ புகழ் மகேஷ் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான வேடம். கதாநாயகி தீஷா மிக அருமையாக நடித்து அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். மற்றொரு நாயகியான தாரா தனது சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, நான் ஆகியோர் எழுதி உள்ளோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் படமாக்கி இருக்கிறேன். இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.படம் பற்றி இயக்குனர் டாக்டர் மாறன் கூறும்போது,  “விதி மீறிய காதலும், விதி மீறிய பயணமும் ஊர் போய் சேராது என்பதை இந்தப் படம் விளக்கும்.  காவல்துறை குறித்து எத்தனையோ படங்கள் வெளி வந்திருந்தாலும் அதில் புதுமையான கதையுடன் இந்தப் படம் இருக்கும். காவல் துறையின் ஒரு பிரிவின் பெருமையை போற்றும் பாடமாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தின் கருத்தை இதுவரை எந்த மொழியிலும் சொல்லவில்லை.

இமான் அண்ணாச்சி தனது வழக்கமான பாணியில் மிகுந்த நகைச்சுவை கலந்து சாலை பாதுகாப்பு விதிகளை மக்கள் ரசிக்கும்படி சொல்லி நடித்திருக்கிறார். மனோபாலா காமடி வயிறு குலுங்கும்படி சிறப்பாக அமைந்துள்ளது. நெல்லை சிவா, நாஞ்சில் விஜயன் காமடி காட்சிகள் என்றும் பேசும்படி அமைந்து இருப்பது மேலும் ஒரு சிறப்பாகும். இந்தப் படத்தில் என்னுடன் ‘அம்மணி’ புகழ் மகேஷ் இன்னொரு நாயகனாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான வேடம். கதாநாயகி தீஷா மிக அருமையாக நடித்து அந்தப் பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளார். மற்றொரு நாயகியான தாரா தனது சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ‘வேதம் புதிது’ பட புகழ் தேவேந்திரன் இசையில் நான்கு பாடல்கள் உருவாகி உள்ளன. பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா, நான் ஆகியோர் எழுதி உள்ளோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, திருப்போரூர், திருவண்ணாமலை உட்பட பல இடங்களில் படமாக்கி இருக்கிறேன். இந்தப் படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் பார்க்க வேண்டிய திரைப்படமாக உருவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.

Find Out More:

Related Articles: