உலகளாவிய, உளவுத்துறை திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்”
கடந்த வருட இறுதியில் Hotstar specials ஒரு புதிய உலகளாவிய, இணைய தொடரை இயக்குநர் நீரஜ் பாண்டேவுடன் இணைந்து வழங்குவதாக அறிவித்தது. பாலிவுட்டின் மிக முக்கியமான இயக்குநராக, பல வெற்றிப்படங்களை தந்த நீரஜ் பாண்டே இத்தொடர் மூலம் முதல் முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகிறார். மிகப்பிரமாண்டமாக தயாராகவுள்ள இத்தொடர் பற்றிய மற்ற விவரங்கள், தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய, உளவுத்துறை திரில்லராக உருவாகும் இந்த இணையத்தொடர், உலக அரசியலில் கடந்த 19 வருட நிகழ்ந்த நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல இடங்களில் துருக்கி, ஆஜர்பெய்ஜான், ஜோர்டன் முதலான நகரங்கள் உட்பட பலவிதமான லொகேஷன்களில் இத்தொடர் படம்பிடிக்கப்படவுள்ளது.
இந்த இணையதொடரை இயக்குநர் நீரஜ் பாண்டே, ஷீத்தல் பாட்டியாவுடன் இணைந்து Friday Storytellers – the digital arm of Friday Filmworks சார்பாக தயாரிக்கிறார். பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்த இணைய தொடரினை நீரஜ் பாண்டேவும், சிவம் நாயரும் இணைந்து இயக்குகிறார்கள். Special ops பற்றிய தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு பல நுண்ணிய விவரங்களுடன் நீரஜ் பாண்டே , தீபக் கிங்ராணி, பெனாஷிர் அலி ஃபிடா ஆகியோர் இத்தொடரின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.
இத்தொடர் குறித்து நீரஜ் பாண்டே கூறியதாவது....
முதல் முறையாக இணையத்தில் நீண்ட கதை சொல்லல் பாணியில் வித்தியாசமான முறையில் ரசிகனை மகிழ்விக்கும் இணையத்தொடர் தயாரிப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கதை சொல்லும் பாணியில் கட்டற்ற சுதந்திரம் கிடைப்பதால் இணையத்தொடர் படு சுவாரஸ்யமாக இருக்கும். Special ops பற்றிய தீவிர நுண் விவரங்களுடன் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களில், உலகளவில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள், இங்கு நம் வாழ்வில் எத்தனை பாதிப்பை ஏற்படுத்துகிறது, என்பதை இந்த தொடர் சொல்லும். இது ரசிகனுக்கு பல ஆச்சர்யங்களை அள்ளித்தருவதுடன், தொடர் முழுவதுமே பரப்பான திரில் அனுபவமாக இருக்கும் என்றார்.
Hotstar specials தொடர்ந்து இந்திய இணைய தொடர்களில் தைரியமிக்க, மிக அழுத்தமான, பலமான கதைகளை படைத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அவற்றில் Roar of the Lion’, ‘Criminal Justice’ and ‘Hostages’ போன்ற தொடர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.