பிறந்தநாளில் 'மாயநதி' அபி சரவணனுக்கு கிடைத்த மூன்று விருதுகள்

SIBY HERALD

சோஷியல் ஸ்டார்' விருது, 'மதுரை சிட்டிசன் 2020' விருது மற்றும் 'மாயநதி பட வெற்றி விருது' என மூன்று விருதுகளை தனது பிறந்தநாளில் பெற்றார் அபி சரவணன்.

 

'கேரளா நாட்டிளம் பெண்களுடனே' படம் மூலம் கதாநாயகனான அறிமுகமான நடிகர் அபி சரவணன் தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், பட்டதாரி படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 

ஜல்லிக்கட்டு போராட்டம்,  நெடுவாசல் மீத்தேன் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என அனைத்து  சமூக நிகழ்வுகளிலும்  இவர் தொடர்ந்து காட்டிவரும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் திரையுலகினரிடமும் மக்களிடமும் இவரை இன்னும் நெருக்கமாக்கி விட்டன.

 

இந்நிலையில் கடந்த வாரம் வெளியான மாயநதி திரைப்படம் அபி சரவணனின் யதார்த்த நடிப்பு  மக்கள் மத்தியிலும் பத்திரிகையாளர்கள் மத்தியிலும் பாராட்டைப்பெற்றது. இதனை தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களை மாயநதி படக்குழுவினர் சந்தித்து ஆசி பெற்றனர்.

 

கடந்த வாரம் தனது பிறந்த நாளை கொண்டாடிய அபி சரவணனுக்கு வாழ்த்துக்களும் விருதுகளும் குவிந்தன.

 

Flixwood.Com நிறுவனம் "சோஷியல் ஸ்டார்" எனும் பட்டத்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் கையால் வழங்கினர். இதையடுத்து அபிசரவணன் நடிகரும் இயக்குனருமான மனோபாலாவிடம்  சோஷியல் ஸ்டார் பட்டத்தினைக் கொடுத்து ஆசி பெற்றார்.

 

மதுரையில் நடைபெற்ற ரேடியோ ஒன் விருது நிகழ்வில் 'மதுரை சிட்டிசன் 2020' எனும் விருது வழங்கப்பட்டது .

 

ரேடியோ ஒன் விருது வழங்கும் அதே நாளில் மாயநதி திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றதால் அந்த விருதை அவர் சார்பாக அவரின் சகோதரி பெற்றுக்கொண்டார்.

 

அடுத்ததாக கொம்பு வச்ச சிங்கம்டா, சாயம் மற்றும் இன்னும் பெயரிடப்படாத 5 படங்கள் என இந்த வருடம் முதல் பிஸியாக இருக்கும் அபி சரவணன் மேலும் பல வெற்றிப்படங்களை கொடுத்து சாதனை படைக்க வாழ்த்துக்கள்!

Find Out More:

Related Articles: