![மாஃபியா பத்திரிகையாளர் சந்திப்பு](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/mafia-press-meet-held-successfully6b823fc5-3c39-4336-ac24-48fc08b4eb5e-415x250.jpg)
மாஃபியா பத்திரிகையாளர் சந்திப்பு
இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”.
துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா - பாகம் 1” படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். டீஸர், டிரெயலர் படு பயங்கர வரவேற்பை பெற்ற நிலையில் பிப்ரவரி 21ந்தேதி படம் வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.
இச்சந்திப்பில் அருண் விஜய்யின் 25 வருட வெற்றிகரமான சினிமா பயணத்தை பாராட்டி வகையில் ரசிகர்கள் மேடையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் படக்குழு மாஃபியா பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டது.
பாடலாசிரியர் விவேக் பேசியது...
முதன் முதலில் துருவங்கள் பதினாறு படத்தில் வேலை செய்தபோதே இயக்குநர் கார்த்திக்கின் திறமை பளிச்சிட்டது. இப்படத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களுடன் வந்துள்ளார். அவர் பெரிய அளவில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். இந்தப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா இருவரையும் தாங்கும் அளவு பாடல்கள் எழுத வேண்டி இருந்தது. அது சுவாரஸ்யமாகவும் இருந்தது. இந்தப்படத்தில் மூன்று பாடல்கள் இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
இசையமைப்பாளர் ஜாக்ஸ் பெஜாய் பேசியது...
லைகாவுக்கும், கார்த்திக்கிக்கும் நன்றி. கார்த்தியை முன்னதாகவே தெரியும்.மிகவும் திறமை வாய்ந்த நபர். அவரது திட்டமிடல் அனைவரையும் அசரடிக்கும். இந்தப்படத்தில் அருண் விஜய், பிரசன்னா இருவரையும் ரசிப்பீர்கள். இந்தப்படத்தில் இசையில் சிம்பொனியை பயன்படுத்தியுள்ளோம். வெளிநாட்டில் வைத்து ரெக்கார்டிங் செய்தோம். படம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் கார்த்திக் நரேன் பேசியது....
“மாஃபியா” உருவாக காரணமாயிருந்த இருவர் லைகாவும், அருண்விஜய்யும் தான் இருவருக்கும் நன்றி. கதை விவாதத்தின் போதே அருண் விஜய், பிரசன்னா தான் மனதில் இருந்தார்கள். அவர்களே இந்தப்படத்தில் நடித்தது பெரும் மகிழ்ச்சி. தடம் சமயத்தில் தான் அருண்விஜய்யிடம் கதை சொன்னேன். அவருக்கு பிடித்திருந்தது. வெகு இயல்பாக இருந்தார். வெகு அற்புதமாக நடித்துள்ளார். பிரசன்னா ஒரு மிகச்சிறந்த நடிகர். அவரது நடிப்பில் இந்தப்படத்தின் வில்லன் வேடம் மிகச்சிறப்பாக பேசப்படும். ப்ரியா பவானி சங்கர் இதுவரை செய்யாத வேடம், செய்துள்ளார் இந்தக்கதாப்பாத்திரம் பற்றி கேட்டபோதே என்னை வித்தியாசமாக யோசித்ததற்கு நன்றி என்றார். ரசிகர்களும் அவரை ரசிப்பார்கள். பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு நான் ரசிகன். இதில் அருமையாக எழுதியுள்ளார். ஜேக்ஸ் அண்ணா துருவங்கள் பதினாறு படத்தில் இருந்தே தெரியும். இந்தபடத்தில் உலகத்தரமான இசையை தந்துள்ளார். 33 நாட்களில் இந்தப்படத்தை எடுத்துள்ளோம் படக்குழுவின் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமே இல்லை. படக்குழு அனைவருக்கும் நன்றி. பிப்ரவரி 21 படம் வருகிறது இது ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.
நடிகை ப்ரியா பவானி சங்கர் பேசியது....
“மாஃபியா” எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். நிறைய நல்ல நண்பர்களை வாழ்வில் தந்த படம். ஜேக்ஸ் இசை எனக்கு பிடிக்கும். அருண், பிரசன்னா திரையில் வந்தாலே அவர்களது திறமை மிளிரும். கார்த்திக் தனக்கு என்ன தேவை என தெரிந்து வேலை செய்யும் மனிதர். இத்தனை சீக்கிரத்தில் இப்படியொரு படம் செய்ய, அவர் திறமையே காரணம். அருண் பலருக்கு முன்மாதிரியாக திகழ்பவர். என் வாழ்விலும் நிறைய பாதிப்பை தந்துள்ளார். ஒரு தோல்வியிலிருந்து மீண்டு எப்படி வெற்றி பெறுவது என கற்றுக்கொள்ள அவரிடம் நிறைய இருக்கிறது. தயாரிப்பாளருக்கு எனது நன்றிகள். “மாஃபியா” இனி உங்கள் கைகளில் இருக்கிறது. மக்களிடம் கொண்டு சேருங்கள் நன்றி.