டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது

SIBY HERALD

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிற டிக்கிலோனா படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.  இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கும் அளவில் இருக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த  ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். இன்றைய தமிழ்சினிமாவின் எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தனம் கலந்த காமெடியால் ஆடியன்ஸை சுவாரசியப்படுத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி என அந்தக் கேரக்டருக்கான முக்கியத்துவத்தை நடிப்பில் கொண்டு வரும் முனிஷ்காந்த், அனுபவம் வாய்ந்த நடிகர்களான நிழல்கள் ரவி, சித்ரா லெட்சுமணன், மேலும் காமெடிக்கு வலு சேர்க்க மொட்டை ராஜேந்திரன், ஷாரா நடிக்கிறார்கள். அருண் அலெக்‌ஸாண்டர் ஒரு வேடமேற்க பிரபல திரைப்பட விமர்சகர் இட்டிஸ் பிரசாந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி டிக்கிலோனோ படத்தில் தோன்றும் அனைத்து நடிகர்களும் மக்களுக்கு பரிட்சயமானவர்கள் என்பதோடு பிடித்தமானவர்களும் கூட. 

 

சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் இப்படத்தை பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்குகிறார்.  இப்படத்தின் தலைப்பு வெகுஜனத்தை வெகுவாக ஈர்த்தது. அதேபோல் படத்தின் டெக்னிக்கல் டீமும் சிறப்பாக அமைந்துள்ளது.   இசை அமைப்பாளாராக யுவன் சங்கர் ராஜா களத்தில் இருப்பதால் படத்தின் பின்னணி இசை பாடல்கள் பற்றிச் சொல்லத்தேவை இல்லை.  தேர்ந்த கேமராமேனாக ஆர்வி பணியாற்ற எடிட்டராக ஜோமின் அசத்த இருக்கிறார். நாயகன் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் ரசிகனை நம்ப வைக்கும் விதமாக கொரியோகிராபியை தினேஷ் கவனித்துள்ளார். சூப்பராயன் சண்டைப்பயிற்சியை கவனித்துள்ளார். கனா படத்தின் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண் பாடல்களை எழுதியுள்ளார்கள். ஆர்ட் டைரக்டராக A. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.

 

மிகப்பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான  எதிர்பார்ப்பு இந்தியளவில் எகிறியுள்ளது. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்திய இப்படம் மிகப்பெரிய கவனம் பெறுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் பெற்றிருக்கிறது.

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் மிகப்பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றனர். இன்று வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் அடுத்து போஸ்ட் புரொடக்சன் பணிகளைத் தீவிரமாக கவனிக்க இருக்கிறார்கள்.

Find Out More:

Related Articles: