150 மில்லியனைத் தாண்டிய புட்ட பொம்மா

frame 150 மில்லியனைத் தாண்டிய புட்ட பொம்மா

SIBY HERALD

தமன் இசையில் உருவான புட்ட பொம்மா பாடல், யூடியூப்பில் 150 மில்லியனைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளியான தெலுங்கு படம், 'அலா வைகுந்தபுரம்லோ'. பூஜா ஹெக்டே ஹீரோயின். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், சமுத்திரக்கனி, முரளி சர்மா, ராஜேந்திர பிரசாத், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர். த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படம் ஊரடங்குக்கு முன்பு வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பதாகக் கூறினர். படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்துள்ளார். இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.

 

படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி இருந்த நிலையில், 'புட்ட பொம்மா என்ற பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் அமைத்துள்ளார். நடனமும் விஷூவலும் இந்தப் பாடலில் ரிச்சாக இருப்பதால் ரசிகர்கள் அடிக்கடி பார்க்கின்றனர். இந்நிலையில் இந்தப் பாடல் யூடியூப்பில் கடந்த மாதம் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது.

 

இந்த மாதம் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. இப்போதும் அந்த பாடலை ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்தப் பாடல் தெலுங்கு ரசிகர்களை மட்டுமல்லாமல், இந்தி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலுக்கு சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் அவர் மனைவியும் டிக் டாக்கில் ஆடியிருந்தனர்.

 

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும், இந்த பாடலுக்கு டிக் டாக் வீடியோவில் ஆடியிருந்தார். நடிகை திஷா பதானி, இந்தப் பாடலின் நடனத்துக்காக அல்லு அர்ஜூனை பாராட்டி இருந்தார். இந்நிலையில் இந்த பாடலை பாடிய பாடகர் அர்மான் மாலிக், 'இந்த பாடல் மீண்டும் டிரெண்டிங் ஆகி இருக்கிறது. இந்தப் பாடலை இவ்வளவு கொண்டாடியதற்கு நன்றி. 1.5 பில்லியன். நம்பமுடியவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

Find Out More:

Related Articles:

Unable to Load More