தில்லுன்னா... தில்லு... செம தில்லுதான்... ஆதிக் ரவிசந்திரனுக்கு...

Sekar Tamil
சென்னை:
தில்லுன்னா... தில்லு... செம தில்லுதான் இந்த இயக்குனருக்கு என்று கோலிவுட் கோகிலாக்கா சொல்றாங்க... என்ன விஷயம் என்றால்....


த்ரிஷா இல்லன்னா நயன்தாரா என்று ஹிட் படத்தை கொடுத்துவிட்டு தற்போது சிம்பு நடிக்கும் அ..அ..அ... படத்தில் செம பிஸியாகி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்தான் அந்த "தில்" பார்ட்டி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் என்ன சொல்லியிருக்கார் தெரியுங்களா? 


‘நான் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்க்க, பெண்கள் வராதீர்கள் என்றேன். ஆனால் கூட்டம் கூட்டமாக வந்தாங்களே... 
தங்கமீன்கள், குற்றம் கடிதல் போன்ற தரமான படத்தை பார்க்காமல், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா மாதிரியான கேவலமான படத்தை தானே நீங்களும் பார்க்க விரும்புகிறீர்கள்.


நீங்கள் என்று தரமான படத்திற்கு ஆதரவு தருகிறீர்களே... அன்று நானும் அதுபோல் நல்ல படமாக எடுக்கிறேன். அதுவரை கேவலமான படங்களை தான் எடுப்பேன்’ என்று அதிரடியாக சொல்லியிருக்கார். தில் பார்ட்டிதானே... முதல்ல நாம திருந்தணும்ப்பா...



Find Out More:

Related Articles: