கண்ணடித்த ப்ரியா கவர்ச்சியில் சிக்ஸர் அடிப்பாரா?

SIBY HERALD
சில வாரங்களுக்கு முன் வெளியான 'ஒரு அடர் லவ்' என்ற மலையாள படத்தின் பாடலான 'மானிய மலராய் பூவை' என்ற பாடலின் வீடியோவின் மூலமாக ,உலக புகழ் பெற்றவர் ப்ரியா பிரகாஷ் வாரியார். உமர் லூலூ இயக்கும்  இத்திரைப்படம், இன்னும் வெளியாக இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் இந்த பாடலில் ப்ரியாவின் ஈர்க்கும் க்யூட்டான ரியாக்ஷன்களும், அவர் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதமும், மலையாள சேட்டன்களை ப்ரியா மீது காதலில் விழ செய்தது. 



இப்பாடலை தொடர்ந்து இப்படத்தின் ட்ரைலரில் இவர் கொடுத்த ரியாக்ஷன்களும் ,அனைவராலும் ரசிக்கப்பட, கேரளாவின் திடீர் கனவுக்கன்னி ஆனார் ப்ரியா பிரகாஷ் வாரியார். இதனை தொடர்ந்து இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இவரை பின்தொடரும் பாலோவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியன்களை தாண்டி, சாதனை படைத்தார். இவரது பாலோயர்கள் எண்ணிக்கை, இன்ஸ்டாக்ராம் உரிமையாளரான மார்க் சூக்கர்பேர்க்கை விட அதிகமாகும். இதனை தொடர்ந்து பிரியாவிற்கு பல விளம்பர வாய்ப்புகளும் ,பல மொழி சினிமாக்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்தது. ஒரு நிறுவனத்தின் விளம்பர போஸ்ட்டை இன்ஸ்டாக்ராமில் ஷேர் செய்ய எட்டு லட்சங்கள் வரை வாங்கினார் ப்ரியா. 



இந்நிலையில் இவருக்கு மிக பெரிய அதிர்ஷ்டமாக பாலிவுட் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது. ஜுனியர் என். டி.ஆர். மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான டெம்பர் படத்தின் இந்தி பதிப்பில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பே அது. இத்திரைப்படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். டெம்பரில் காஜல் அகர்வால் அரைகுறை ஆடைகளுடனும், சூடேற்றும் நடன அசைவுகளும் என, கவர்ச்சி தாண்டவம் ஆடியிருப்பார். இத்தகைய நிலையில், இந்தி பதிப்பில் கதாநாயகிக்கு டூ பீஸ் பிகினி காட்சி கூட இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. க்யூட்டாக கண்ணடித்து கவர்ந்த ப்ரியா வாரியார், பிகினி நீச்சல் உடையில் கவர்ச்சி மழை பொழிவாரா? பொறுத்திருந்து பாப்போம். 


Find Out More:

Related Articles: