நயனின் அடுத்த படம் ரிலீஸ்!

SIBY HERALD
நடிகை நயன்தாரா மலையாள படங்களில் தான் திரை உலகத்தில் அறிமுகமானார். பின்னர் சந்திரமுகி மூலமாக தமிழுக்கு வந்தார். இமைக்கா நொடிகள், மாயா,அறம், கோலமாவு கோகிலா என தனி மனுஷியாக படங்களை தாங்கி ஹிட் அடித்து வருகிறார் நயன்தாரா.



கடைசியாக மலையாளத்தில் புதிய நியமம் படத்தில் நடித்தார் மம்முட்டி ஜோடியாக. இதனை அடுத்ததாக நிவின் பாலி ஜோடியாக லவ் ஆக்ஷன் டிராமா என்ற படத்தில் அறிமுக இயக்குனர் தயான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.



இந்த படத்தில் நயன் பாலக்காடு தமிழ் பெண்ணாக நடித்துள்ளார். காதலும் காமெடியும் நிறைந்த இந்த படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.


Find Out More:

Related Articles: