மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சமுத்திரக்கனி!

SIBY HERALD
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளனர். இந்த படம் பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன்  கூட்டணியில் வரும் மூன்றாவது படமாகும்.



ஏற்கனவே இவர்கள் இருவரும் சிவகார்த்திகேயன்  அறிமுகமான மெரினா மற்றும் விமலுடன் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பணியாற்றியுள்ளனர். இப்பொழுது இந்த படத்தின் நடிகை நடிகையர் பெயர்கள் அறிவிக்க பட்டு வருகின்றன.



இப்பொழுது இந்த படத்தில் புதிதாக இணைந்துள்ளனர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி. ஏற்கனவே இவர் பொன்ராம் இயக்கிய ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இவருக்கு பாசிட்டிவ் ரோல் என்றும் கூறப்படுகிறது.


Find Out More:

Related Articles: