மூன்று நாயகிகளுடன் ஜிவி பிரகாஷ்!

SIBY HERALD
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் காமெடி இயக்குனர் எழில் இயக்கி வரும் கிராமத்து நகைச்சுவை  படத்தில் ஏற்கனவே ஈஷா ரெபா மற்றும் நிகிஷா பட்டேல் ஆகிய இருவரும் நாயகிகளாக  நடித்து வரும் நிலையில் இப்பொழுது மூன்றாவது  நாயகியாக சாக்ஷி அகர்வால் நடிக்க   ஒப்பந்தமாகி திருநெல்வேலி  படப்பிடிப்பில்  கலந்து கொண்டுள்ளார்.



சாக்ஷி அகர்வால் கூறுகையில் அவர் இந்த படத்தில் முதன்முறையாக ஒரு பக்கா  கிராமத்து பெண் வேடத்தில்  நடித்து வருவதாகவும், திருநெல்வேலி வட்டாரத்தை சேர்ந்த ஒரு  கிராமத்து பெண் கேரக்டர் என்பதற்காக நெல்லை தமிழின  உதவி இயக்குனர் மூலமாக கற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

மேலும்,  இது சிறிய வேடம் தான் என்றாலும் கதைக்கு  முக்கியத்துவமான கேரக்டர் என்பதால்  ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ள சாக்ஷி, இதற்கு முன்னர் சூப்பர்ஸ்ட்டார்  ரஜினியின் காலா மற்றும் தல  அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்துள்ளார்.


Find Out More:

Related Articles: