மீண்டும் காளியான தலைவர்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சில காலமாக சரியான வெற்றி படங்கள் இல்லாமல் தடுமாறி வந்தார். பா.ரஞ்சித்  இயக்கத்தில் அடுத்தடுத்து அவர் நடித்த பிரம்மாண்ட படங்களான கபாலி மற்றும் காலா படங்கள் இரண்டுமே விமர்சனங்களை எதிர்மறையாக பெற்று படம் படு தோல்வியை அடைந்தது.


ஆனால் சமீபத்தில் வெளியான படமான டூ பாய்ண்ட் ஓ படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படம் உலக அளவில் பெரும் வசூலை குவித்து வருகிறது.  இந்த படம் இதுவரையில் நான்கே நாட்களில் நானூறு கோடிகள் வசூலை வாரி குவித்துள்ளது. இந்நிலையில் இவரது அடுத்த படமான பேட்ட படத்தின் முதல் பாடலான மரண மாஸ் பாடல் இன்று வெளியானது . எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் அனிருத் பாடியுள்ள இந்த பாடலின் மூலமாக பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டாரின் பெயர் காளி என்பது தெரிய வந்துள்ளது.



கார்த்திக்  சுப்பராஜ் இயக்கத்தில் திரிஷா மற்றும் சிம்ரன் ஜோடியாக தலைவர் நடித்துள்ள பேட்ட படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. காளி என்ற பெயர் தான் சூப்பர்ஸ்டார் இயக்குனர் மஹேந்திரன் இயக்கத்தில் நடித்த முள்ளும் மலரும் படத்தில் அவரது பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.  


Find Out More:

Related Articles: