மரமும்... பொந்தும் அலுத்து போச்சுங்க... வீட்டுல கொஞ்சம் இடம் கொடுங்க...
பாங்காங்க்:எம்புட்டு நாள்தான் மரத்திலேயும், பொந்துலேயும் வாழ்வது... கொஞ்சம் உங்க வீட்டுலேயும் இடம் கொடுங்கன்னு வந்திடுச்சு போலிருக்கு. சின்ன சைஸா இருந்தா பரவாயில்லை. கொஞ்சம்.. இல்ல..இல்ல... ரொம்பவே பெரிய சைஸா இருந்தா... இது தாய்லாந்து கூத்து.
தாய்லாந்தில் வீட்டுக்குள் புகுந்த ராட்சத பல்லியால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.தாய்லாந்தின் நான்ந்தாபரி என்ற மாகாணத்தில் கிராமபகுதியில் அட்டானி தையாங்ஹோங் என்பவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பினார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவை முட்டிக்கொண்டு ராட்சத பல்லி நின்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
தகவலறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ராட்சத பல்லியை பார்த்தனர். அடுத்தது அவர்கள் செய்ததுதான் செம காமெடி. அந்த பல்லியை துரத்துவதை விட்டு விட்டு. தங்கள் செல்போனில் படமாகவும், வீடியோவாகவும் எடுக்க ஆரம்பித்து விட்டனர். காட்ஸில்லா என்ற ஆங்கில திரைப் படத்தில் வரும் ஒரு வகை ராட்சத பல்லி இனம் போன்று இது இருந்தது.
அந்த பல்லி தரையில் மெதுவாக ஊர்ந்து வீட்டின் கதவை முட்டி உள்ளே செல்ல முயன்ற 15 நிமிடம் ஓடும் வீடியோ காட்சி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.பதிவேற்றம் செய்த சில மணி நேரத்தில் 2 லட்சத்து 50 பேர் ஷேர் செய்ததாக தாய்லாந்தில் இருந்து வெளிவரும் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதெல்லாம் சரி... அந்த பல்லியை காட்டில் விட்டுட்டீங்களா? இல்ல வறுத்து சாப்பிட்டு விட்டீர்களா என நம்மாளுங்க மீம்ஸ் தட்ட ஆரம்பிச்சுட்டாங்க...